'ராணுவ உடையை அணிந்த பிறகு எனக்குள் சில மாற்றங்கள்' - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி பதிவு

2 months ago 11

கோவை,

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை கதையாக கொண்டுள்ளது. மேலும் இப்படம் வரும் தீபாவளி அன்று 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கடந்த சில நாட்களாகவே படக் குழு கலந்து வருகிறது.

'அமரன்' திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி, கோவையில் நேற்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசியதாவது, 'இத்திரைப்படத்தில் ராணுவ உடையை போடும் போது, அணிந்த பிறகு சின்னச் சின்ன மாற்றங்கள் எனக்குள் வந்துள்ளன. பின்னர் அந்த உடையை நினைவாக வைத்துக்கொள்ள அதை வீட்டுக்குக் கொண்டு வந்துவிட்டேன். 

படப்பிடிப்பு தளம் சீரியஸாக இருக்கும், ஆனால் நான் கொஞ்சம் ஜாலியாத்தான் இருப்பேன். இப்படத்தில் நடிப்பதற்கு முன்னர் முதலில் மன ரீதியாக தான் தயாரானேன். பின்னர் என் உடலை தயார் செய்தேன். முகுந்த் கதை அனைவருக்கும் ஒரு செய்தியாகத் தான் தெரியும். ஆனால், இதை பற்றி படமாக தெரிய வேண்டும் என்பதால் தான் இப்படத்தை எடுத்துள்ளோம்'' என்றார் கூறியுள்ளார். 

Read Entire Article