ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் 47 இடங்கள் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன என கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் தீர்வுகள் குறித்து அமைச்சர் காந்தி நேற்றைய தினம் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு அனைத்து துறை சார்ந்த ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ள இடங்கள் மற்றும் அதற்கான தீர்வு நடவடிக்கை உள்ளிட்டவைகள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காந்தி, ராணிப்பேட்டையில் 124 மண்டபத்தில் நிவாரண முகாம் அமைக்கப்படவுள்ளது. ஏற்கெனவே உள்ள முகாம்களில் 8,000 பேரை தங்க வைக்க முடியும். வருவாய்த்துறை மூலம் அனைத்து உபகரணங்கள், வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. என்று தெரிவித்தார்.
The post ராணிப்பேட்டையில் 47 இடங்கள் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன: அமைச்சர் காந்தி பேட்டி appeared first on Dinakaran.