
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரியாக இருப்பவர் பஜன்லால் ஷர்மா. அவருக்கு நேற்று காலை கொலை மிரட்டல் வந்தது. போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் அழைப்பு மூலம் மர்மநபர் இந்த மிரட்டலை விடுத்தார்.
போலீஸ் விசாரணையில் சிறைச்சாலையில் இருந்தபடி ஒரு கைதி, இந்த மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிறை கைதியின் பெயர் ஆதில் என்று கூறப்படுகிறது. மதுவுக்கு அடிமையானவர் என்றும், உளவியல் பிரச்சினையால் தன் கையை வெட்டிக் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.
அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. சிறை கைதிக்கு எப்படி செல்போன் கிடைத்தது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.