உதய்ப்பூர்: பிரான்சை சேர்ந்த ஒரு பெண் விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொள்ள ராஜஸ்தான் வந்துள்ளார். உதய்ப்பூரில் ஒரு ஓட்டலில் தங்கி இருந்த அந்த பெண், டைகர் ஹில்ஸ் பகுதியில் நடந்த ஒரு விருந்தில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு அறிமுகமான சித்தார்த் ஓஜா உதய்பூரில் உள்ள முக்கிய இடங்களை சுற்றி காண்பிப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்று, பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சித்தார்த் ஓஜாவை நேற்று கைது செய்தனர். சித்தார்த் ஓஜா சினிமா, இசை வீடியோக்கள்,தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.
The post ராஜஸ்தானில் பிரான்ஸ் பெண் பாலியல் பலாத்காரம்: சீரியல் நடிகர் கைது appeared first on Dinakaran.