'ராஜஸ்தானில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது' - காங்கிரஸ் விமர்சனம்

3 months ago 22

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முழுவதுமாக சீர்குலைந்துவிட்டது என காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது;-

"ராஜஸ்தான் மாநிலத்தில் முந்தைய ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டப்பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முழுவதுமாக சீர்குலைந்துள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகளை பா.ஜ.க. அரசால் நிறைவேற்ற முடியவில்லை. அரசாங்கத்தின் தவறுகளால் மக்கள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

ராஜஸ்தானில் இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். மக்களவை தேர்தலில் ராஜஸ்தானில் கடந்த 2 முறை பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்த முறை 11 இடங்களில் நாங்கள் பா.ஜ.க.வை தோற்கடித்துள்ளொம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read Entire Article