ராஜஸ்தானில் கார்-லாரி நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

4 months ago 14

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் அனுப்கரில் பகுதியில் கார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அனுப்கரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 911 இல் உள்ள பஸ் நிலையம் அருகே நடந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விபத்துக்குள்ளான கார் டிராக்டர் டிராலியை முந்தி சென்றபோது, எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவர்கள், கார் டிரைவர் பிரபு (40), அவரது தந்தை ஓம்பிரகாஷ் (65), இவர்களது உறவினர் பல்பீர் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளன என்று போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Read Entire Article