ராஜபாளையம் அருகே வயலுக்குள் இறங்கிய பஸ்: பயணிகள் அலறல்

1 week ago 3

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே வயலுக்குள் பயணிகளுடன் பஸ் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் இருந்து அரசு பஸ் 30 பயணிகளுடன் சுந்தரராஜபுரம் நோக்கி நேற்று புறப்பட்டது. சேத்தூர் ஊரக காவல் நிலையம் அருகே ஊருக்குள் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே சாலையில் மறுபுறம் நின்று கொண்டிருந்த உரம் மூட்டை ஏற்றிய டிப்பர் லாரி மீது மோதாமல் இருக்க, பஸ் டிரைவர் இடது பக்கமாக ஒதுங்கி சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் வயலுக்குள் இறங்கியது.

இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். உடனடியாக பஸ்சை விட்டு இறங்கினர். குறுகலான இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் விரிவாக்கம் செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ராஜபாளையம் அருகே வயலுக்குள் இறங்கிய பஸ்: பயணிகள் அலறல் appeared first on Dinakaran.

Read Entire Article