ராஜபாளையம், டிச.30: விஜயகாந்த் நினைவுதினத்தை முன்னிட்டு ராஜபாளையத்தில் தேமுதிக சார்பில் தடையை மீறி ஊர்வலம் சென்றனர். விருதுநகர் மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவுதின நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தடையை மீறி தென்காசி ரோடு தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கிய ஊர்வலம் ஜவஹர் மைதானம் அருகே விஜயகாந்த் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட துணைச் செயலாளர் சண்முகநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் பூக்கடை முருகேசன், நகரச் செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி, அவைத் தலைவர் காளிமுத்து, பொருளாளர் பிச்சை, ஒன்றிய அவை தலைவர் சீனிராஜ் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post ராஜபாளையத்தில் தேமுதிகவினர் அமைதி ஊர்வலம் appeared first on Dinakaran.