ராகுல்காந்தி மே7ம் தேதிக்குள் பதில் தர வேண்டும்: உ.பி. நீதிமன்றம் உத்தரவு

1 month ago 12

சம்பல்: டெல்லியில் ஜனவரி 15ம் தேதி நடந்த காங்கிரஸ் புதிய தலைமையகத்தின் திறப்பு விழாவின்போது பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, நாங்கள் இப்போது ஆர்எஸ்எஸ் மற்றும் இந்திய அரசுக்கு எதிராக போராடுகிறோம் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக இந்து சக்தி தளத்தின் தேசிய தலைவர் சிம்ரன் கும்பதா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்றம் ராகுல்காந்தி ஏப்ரல் 4ம் தேதி ஆஜராக வேண்டும் அல்லது அவரது பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த மாதம் 20ம் தேதி உத்தரவிட்டு இருந்தது. இதனைதொடர்ந்து இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் ராகுல்காந்தி இது தொடர்பாக மே7ம் தேதிக்குள் தனது பதிலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

 

The post ராகுல்காந்தி மே7ம் தேதிக்குள் பதில் தர வேண்டும்: உ.பி. நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article