லக்னோ : ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யக் கோரி கர்நாடகாவைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.விக்னேஷ் ஷிஷிர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘ராகுல் காந்திக்கு இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் இரட்டை குடியுரிமை உள்ளது.
இந்திய சட்டத்தின்படி, ஒரு நபர் இரண்டு நாடுகளின் குடிமகனாக இருக்க முடியாது. இந்த வழக்கில், ஏதாவது ஒரு நாட்டின் குடியுரிமை ரத்து செய்யப்பட வேண்டும். ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ஒன்றிய அரசு ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்’ என்று கூறினார். இவ்வழக்கை வரும் டிசம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைத்த அலகாபாத் உயர் நீதிமன்றம், ஒன்றிய அரசு மற்றும் ராகுல் காந்தியிடம் மூன்று வாரங்களுக்குள் விளக்கம் கோரியுள்ளது.
The post ராகுலின் குடியுரிமையை ரத்து செய்யக் கோரி மனு : ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.