கீவ்: அமெரிக்கா- உக்ரைன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் ரஷ்யா மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்கா அணுகுவதற்கு அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இது உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து ராணுவ உதவியை செய்யக்கூடிய ஒரு நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரங்களில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு உக்ரைனின் கெர்சன் பகுதியில் உக்ரைன் டிரோன் மூலமாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதேபோல் ரஷ்ய ராணுவம் கருங்கடல் துறைமுகமான ஒடேசாவில் டிரோன் தாக்குதல் நடத்தியது. அதிகாலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.
The post ரஷ்யா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: 9 பேர் பலி appeared first on Dinakaran.