ரஷியா - உக்ரைன் விவகாரம்: அமெரிக்கா எச்சரிக்கை

20 hours ago 2

வாஷிங்டன்,

.ரஷியா - உக்ரைன் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போர் நீடித்து வரும் நிலையில், போரை நிறுத்துவதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.இது தொடர்பாக சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடந்தது. முன்னதாக, ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் தொலைபேசி வழியாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நேரிலும் பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்கா- ரஷியா வெளியுறவு மந்திரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். ஆனால், இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ரஷியா- உக்ரைன் இடையெயான போர் நிறுத்த ஒப்பந்த முயற்சியில் இருந்து டிரம்ப் விலக நேரிடும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ கூறியதாவது:-

போர் நிறுத்தத்திற்கான அறிகுறி எதுவும் தென்படாவிட்டால், அமைதி முயற்சியை அமெரிக்கா கைவிடும். நாங்கள் வாரக்கணக்கில் அமைதி ஒப்பந்த முயற்சியை தொடர விரும்பவில்லை. இப்போதே விரைவாக தீர்மானிக்க வேண்டும். போர் நிறுத்தம் சாத்தியமா இல்லையா என்பதை பற்றி அடுத்த சில வாரங்களில் பேசுகிறேன்.போர் நிறுத்த விஷயத்தில் டிரம்ப் உறுதியாக உள்ளார். ஒரு அமைதி ஒப்பந்தம் எட்டுவது கடினம் என்பது தெளிவாக தெரிந்தாலும் அது விரைவில் செய்யப்படுவதற்கான அறிகுறிகள் இருக்க வேண்டும்.இதை 12 மணி நேரத்தில் செய்து முடிக்க முடியும் எனயாரும் சொல்லவில்லை. ஆனால், அது எவ்வளவு தூரம் வித்தியாசமாக இருக்கிறது என்பதையும் அந்த வேறுபாடுகளைக் குறைக்க முடியுமா என்பதையும் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்" என்றார்.

Read Entire Article