ரவுடி கொலை வழக்கில் கைதான இருவருக்கு காலில் மாவுக்கட்டு

4 months ago 39
பல்லடம் அருகே கரையான்புதூரில் கடந்த மாதம் வினோத்கண்ணன் என்ற ரவுடி கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர்களில் இரண்டு பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது தப்பியோட முயன்று பள்ளத்தில் விழுந்ததில் இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மறைத்து வைத்துள்ள இடத்தை காட்டுவதாக கூறிய தங்கராஜ், ராஜேஷ் ஆகியோரை அங்கு அழைத்துச் சென்றபோது, என்கவுன்டர் செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இருவரும் தங்களை தள்ளிவிட்டு தப்பியோட முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். இதில் ராஜேஷ்க்கு இடது காலிலும், தங்கராஜ்க்கு வலது காலிலும் முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.
Read Entire Article