ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி; மூதாட்டி கைது

1 month ago 7

 

பாலக்காடு, அக்.11: புனலூரில், ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி 15 லட்சம் ரூபாய் அபகரித்த மூதாட்டியை கைது செய்தனர். திருவனந்தபுரம் மலயன்கீழ் விவேகானந்த நகரை சேர்ந்தவர் சீதாராணி (65). இவர் கொல்லம் மாவட்டம் புனலூரை சேர்ந்த அனுலால் என்ற வாலிபருக்கு ரயில்வே வேலை வாங்கி தருவதாக 15 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். பின்னர் போலி நியமன சான்றிதழ் வழங்கி தப்பித்துள்ளார். மூதாட்டி வழங்கி நியமன ஆவணத்தை ரயில்வே அலுவலகத்தில் காண்பித்தபோது, போலி சான்றிதழ் என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட வாலிபர் புனலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் புனலூர் எஸ்ஐ அனீஷ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மூதாட்டி இதுபோல பல பேரிடம், பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார் என தெரியவந்தது. மேலும் ஏற்கனவே மோசடி வழக்கில் சிக்கி கைதாகி, தலச்சேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து, இதுகுறித்து புனலூர் போலீசார் வழக்கு பதிந்து மூதாட்டி சீதாராணியை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி; மூதாட்டி கைது appeared first on Dinakaran.

Read Entire Article