நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி புதுமனை தெருவை சேர்ந்தவர் முகமது தௌபிக் (19). பாலிடெக்னிக் கல்லூரி மாணவர். திட்டச்சேரி புடவைகாரத் தெருவை சேர்ந்தவர் முகமது பாரிஸ் (13). 8ம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இரண்டு பேரும் நேற்று ரமலான் பண்டிகையை முன்னிட்டு திட்டச்சேரியில் உள்ள பெரிய பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றனர். தொழுகையை முடித்துக் கொண்டு பைக்கில் வீடு திரும்பினர். பைக்கை முகமதுதௌபிக் ஓட்டினார். இவர்கள் திட்டச்சேரி மெயின் ரோட்டில் வந்தபோது, திடீரென நிலைதடுமாறி மோட்டர் சைக்கிள் சாலையின் ஓரத்தில் இருந்த சுவற்றின் மீது மோதியது. இதில் கீழே விழுந்த இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
The post ரம்ஜான் தொழுகை சென்ற போது பைக் விபத்தில் 2 மாணவர்கள் பலி appeared first on Dinakaran.