கூடுவாஞ்சேரி: வண்டலூர் அருகே ரத்தினமங்கலத்தில் ரூ.13 லட்சத்தில் சாலை அமைக்க அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட இரத்தினமங்கலம் கிரமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில், பொன்னியம்மன் கோவில் தெரு மற்றும் வாஉசி தெருவில் மழை காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குவதால் அப்பகுதி மக்களும், பள்ளிக்கு செல்கின்ற மாணவர்களும் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்நிலையில், மேற்படி பகுதிகளில் உள்ள சாலைகளை புதிதாக அமைத்து தரும்படி காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான கஜா என்ற கஜேந்திரனிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், மக்களின் கோரிக்கைகளை ஏற்று மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து சுமார் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை மற்றும் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
இதில், சிறப்பு அழைப்பாளராக காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான கஜா என்ற கஜேந்திரன் கலந்துகொண்டு ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை மற்றும் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டினார். பின்னர், பணியை தொடங்கி வைத்தார். இதில், ஒன்றிய துணை சேனல் ஏவிஎம் இளங்கோவன், வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணிரவி, அதிமுக நிர்வாகிகள் கனி என்ற கணேஷ், சுரேஷ் உட்பட உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
The post ரத்தினமங்கலத்தில் ரூ.13 லட்சத்தில் சாலை அமைக்க அடிக்கல் appeared first on Dinakaran.