ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

3 months ago 23

ஊட்டி: ரத்த அழுத்தத்தை சீராக்குதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்கும் ‘பேஷன்’ பழங்கள் ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்கிறது. ரத்த அழுத்தத்தை சீராக்கும் இதயத்தின் நட்பு என அழைக்கப்படும் ‘பேஷன்’ பழங்கள் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் விளைவிக்கப்படுகிறது. இதில், மெக்னீசியம், கால்சியம், இரும்பு பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும், இந்த பழங்களை கொட்டைகளுடன் சாப்பிடும் போது, ரத்த நாளங்களில் உள்ள கொழுப்புகள் உறிஞ்சப்படுகிறது. இதனால், ரத்தத்தில் உள்ள கொழுப்புகள் குறைகிறது.

மேலும், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ப்ரீரேடிக்கல்களை அகற்றவும் உதவுகிறது. மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற நோய்களையும் கட்டுப்படுத்துகிறது. இந்த பழங்களின் மகிமையை அறிந்த ஒரு சிலர் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். சீசன் சமயங்களில் இப்பழங்கள் கிலோ ஒன்று ரூ.200 வரை விற்பனை செய்யப்படும். ஆனால், தற்போது விலை உயர்ந்து கிலோ ரூ.400 வரை விற்கிறது. தற்போது ஊட்டியில் சாலையோரங்களிலும், கடைகளிலும் இந்த பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பலரும் இந்த பேஷன் பழங்களை அதிகளவு வாங்கிச் செல்கின்றனர்.

The post ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article