ரஞ்சி கோப்பை: ரெயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு இன்னிங்ஸ் வெற்றி

2 hours ago 2

அகமதாபாத்,

90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு- ரெயில்வே அணிகள் இடையிலான ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தமிழகம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ரெயில்வே அணி முதல் இன்னிங்சில் 229 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக முகமது சைப் 60 ரன்கள் அடித்தார். தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக அஜித் ராம் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி 133.3 ஓவர்களில் 438 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக முகமது அலி 91 ரன்கள் அடித்தார். ரெயில்வே தரப்பில் அதிகபட்சமாக குனால் யாதவ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதனையடுத்து 209 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ரெயில்வே அணி 48.4 ஓவர்களில் 184 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் தமிழகம் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரெயில்வே தரப்பில் அதிகபட்சமாக விவேக் சிங் 63 ரன்கள் அடித்தார். தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக சோனு யாதவ் மற்றும் அஜித் ராம் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Tamil Nadu clinch a commanding victory over Railways, securing a bonus point! The second phase of the Ranji Trophy 2024-25 will start on January 23, following the completion of the Syed Mushtaq Ali Trophy and the Vijay Hazare Trophy. ️#RLWvTN #RanjiTrophy #TamilNaduCricketpic.twitter.com/YPVBo2UYKt

— TNCA (@TNCACricket) November 16, 2024
Read Entire Article