'ரஜினிகாந்த் விரைவில் பூரண குணம் பெற வேண்டும்' - துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

3 months ago 27

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் விரைவில் உடல்நலம் பெற வேண்டுமென திரை, அரசியல் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் விரைவில் பூரண குணம் பெற வேண்டும் என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பூரண குணம் பெற்று விரைவில் இல்லம் திரும்ப விழைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூப்பர் ஸ்டார் @rajinikanth சார் பூரண குணம் பெற்று விரைவில் இல்லம் திரும்ப விழைகிறேன்.

— Udhay (@Udhaystalin) October 1, 2024

Read Entire Article