ரஜினிகாந்த் பூரண நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் - த.வெ.க. தலைவர் விஜய்

3 months ago 27

சென்னை,

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அவரது இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வீக்கம் அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது. ரத்தக்குழாய் வீக்கத்திற்கான சிகிச்சைக்கு ஸ்டன்ட் (STENT) என்ற கருவி பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.

இந்த நிலையில், ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலம் பெற வேண்டுமென தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது:

"மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் திரு. @rajinikanth sir அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன்.

— TVK Vijay (@tvkvijayhq) October 1, 2024
Read Entire Article