ரஜினி, கமல், விஜய்க்கு பிறகு... 'அமரன்' மூலம் வரலாறு படைத்த சிவகார்த்திகேயன்

1 week ago 4

சென்னை,

மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிய 'அமரன்' படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில், சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

அமரன் படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளநிலையில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் விஜய்க்கு பிறகு ரூ. 250 கோடிக்கு மேல் வசூல் செய்த படத்தை கொடுத்த நான்காவது தமிழ் நடிகர் என்ற வரலாறை சிவகார்த்திகேயன் படைத்துள்ளார்.

பல நட்சத்திரங்கள் நடித்திருந்த பொன்னியின் செல்வன் இந்த சாதனையை படைத்திருந்தாலும், சிவகார்த்திகேயன் தனி ஒருவராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இதனை செய்துள்ளதால் 4-வது நடிகராக கருதப்படுகிறார்.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'அமரன்' விரைவில் ரூ.300 கோடி வசூலை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Read Entire Article