ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த மாளவிகா மோகனன் - ஐஸ்வர்யா ராய், விக்ரம் பற்றி என்ன கூறினார்?

3 months ago 32

சென்னை,

மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்' போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். அதன் பிறகு நடிகர் தனுஷ் நடித்த 'மாறன்' படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் நடித்திருந்தார். தற்போது, பிரபாசுடன் தி ராஜா சாப், கார்த்தியுடன் சர்தார் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே சமீபத்தில் நடிகை மாளவிகா மோகனன் எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். அதில் ரசிகர் ஒருவர் உங்களை ஒரு ஹாரர் படத்தில் பேயாக பார்க்க முடியுமா? என்று கேட்டார் . அதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன், 'என்னை ஏன் பேயாக பார்க்க விரும்புகிறீர்கள்?' என்றார்.

மற்றொருவர், உங்களுக்கு பிடித்த விக்ரம் படம் எது என்று கேட்டார், அதற்கு அவர், 'அவர் நடித்த பல படங்கள் எனக்கு பிடிக்கும். ஆனால், பொன்னியின் செல்வன் 2 படம் எனக்கு மிகவும் பிடிக்கும்' என்றார். வேரொருவர், அடுத்த தமிழ் படம் எது என்று கேட்க, அதற்கு மாளவிகா, 'சர்தார் 2. இதில் நான் வித்தியாசமான சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்', என்றார்.

தொடர்ந்து ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்த மாளவிகா மோகனனிடம் ஐஸ்வர்யா ராய் பற்றி சில வார்த்தைகள் கூறுமாறு ஒருவர் கேட்டார், அதற்கு அவர், 'நான் அவரது மிகப்பெரிய ரசிகை' என்றார்.

Read Entire Article