ரசாயன உரங்கள் இல்லாத பச்சை காய்கறிகள்; விராலிமலை அரசு பள்ளியில் மாணவிகள் நடத்திய சந்தை: பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

1 week ago 3

விராலிமலை,நவ.8: விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சியின் ஒரு பகுதியாக ரசாயன கலவை இல்லாத காய்கறிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மாணவிகள் அவர்களது தோட்டம் மற்றும் இல்லங்களில் விளைவித்த பல்வேறு புதிய (ப்ரஷ்) காய்கறிகளை சந்தைப்படுத்தினர். விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது இதில், வட்டாரத்தில் உள்ள தொடக்க நிலை முதல் மேல்நிலை பள்ளிகள் வரை உள்ள 44 பள்ளிகளில் கல்வி பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர் இதில், மாறுவேடம், பாடல், நடனம், ஓவியம், கதை கூறுதல், பேச்சு போட்டி, களிமண் சிற்பம் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது இதில், நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் தனி மற்றும் குழு திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வின், ஒரு பகுதியாக விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இதில் மாணவிகள் தாங்கள் உருவாக்கிய பல்வேறு அறிவியல் சார்ந்த படைப்புகளை காட்சிப்படுத்தினர். கண்காட்சியின் முத்தாய்ப்பாக மாணவிகள் நடத்திய காய்கறி சந்தை பார்வையாளர்கள் மற்றும் பெற்றோர்களை வெகுவாக கவர்ந்தது. இதில், மாணவிகள் கத்தரிகாய், வெண்டைகாய், தேங்காய், நெல்லிக்காய், பல்வேறு கீரை வகைகள், முருங்கய், பச்சை மிளக்காய், தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, மாங்காய், அவரைகாய், புடலங்காய், பாகற்காய், பீர்கங் காய், வாழைக்காய், வாழை தண்டு உள்ளிட்ட பல்வேறு செயிகளில் இருந்து பறித்த பச்சை காய்கறிகளை சந்தைபடுத்தினர்.

சந்தைபடுத்தப்பட்ட காய்கறிகள் அனைத்தும் மாணவிகளின் இல்லங்கள் மற்றும் தோட்டங்களில் ரசாயன உரங்கள் இல்லாமல் விளைவித்தது என்பதை வெளிச்சந்தைகளில் விற்பது போல மாணவிகள் கூக்குரலிட்டு காய்கறிகளை வாங்கிச் செல்லுமாறு ஆசிரியர்கள் மற்றும் பார்வையாளர்களை அழைத்தனர். இதை தொடர்ந்து மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில் பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் காய்கறிகலை வாங்கிச் சென்றனர். இதனால், அனைத்து காய்கறிகளும் அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்தன. தலைமை ஆசிரியர் ரோஜா வினோதினி அறிவுரை மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட மாணவிகளின் இந்த பச்சை காய்கறி விழிப்புணர்வு சந்தை அனைவராலும் பாரட்டப்பட்டதோடு நாள் முழுவதும் பள்ளியில் பேசும் பொருளானது என்பது குறிப்பிடத்தக்கது.

The post ரசாயன உரங்கள் இல்லாத பச்சை காய்கறிகள்; விராலிமலை அரசு பள்ளியில் மாணவிகள் நடத்திய சந்தை: பொதுமக்களுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Read Entire Article