யோகி பாபு நடித்த 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

2 hours ago 3

சென்னை,

நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும் பரவியது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மண்டேலா' படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் 'போட், தி கோட், டீன்ஸ்' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது விடாமுயற்சி, தி ராஜா சாப், பூமர் அங்கிள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது யோகிபாபு 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' என்ற படத்தில் நடித்துள்ளார். யோகி பாபுவுடன் செந்தில், அகல்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை 'சகுனி' படத்தை இயக்கிய ஷங்கர் தயாள் இயக்கி இருக்கிறார்.சமீபத்தில் இப்படத்தின் டீசரை நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், யோகி பாபு நடித்த 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற 24-ந் தேதி வெளியாக உள்ளது. இது குறித்த பதிவை இயக்குனர் ஷங்கர் தயாள் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

pic.twitter.com/aqSZr29tn8

— Shankar Dayal. N (@shankardayaln) January 11, 2025
Read Entire Article