யோகா வகுப்பு எடுக்க சென்ற இடத்தில் 40 சவரன், வைர நெக்லஸ் திருடிய பெண் பிடிபட்டார்: ரூ.4.78 லட்சம் மீட்பு

1 month ago 12

சென்னை: வடபழனியில் யோகா வகுப்பு எடுக்க சென்ற போது 40 சவரன், வைர நெக்ல்ஸ் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.4.78 லட்சத்தை போலீசார் மீட்டனர். வடபழனி, ஏவிஎம் ஸ்டூடியோ வளாகத்தில் உள்ள குடியிருப்பை சேர்ந்தவர் ஜனனி (36). இவர், சில நாட்களுக்கு முன், வீட்டின் பீரோவில் வைத்திருந்த நகைகளை சரிபார்த்த போது, 40 சவரன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஜனனி கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், கே.கே.நகர் காவல் நிலைய போலீசாரால் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அதே குடியிருப்பில் வசித்து வரும் காயத்ரி (48) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1 வைர நெக்லஸ் மற்றும் பணம் ரூ.4.78 லட்சம் மீட்கப்பட்டது. விசாரணையில் காயத்ரி, யோகா வகுப்பு எடுப்பதற்காக ஜனனி வீட்டிற்கு சென்று வரும் போது சுமார் 2 மாதங்களாக ஜனனி வீட்டிலிருந்து சிறிது சிறிதாக தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட காயத்ரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

The post யோகா வகுப்பு எடுக்க சென்ற இடத்தில் 40 சவரன், வைர நெக்லஸ் திருடிய பெண் பிடிபட்டார்: ரூ.4.78 லட்சம் மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article