சென்னை: யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற நான் முதல்வன் திட்ட மாணவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி பாராட்டு தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவுத்திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் குடிமைப்பணி தேர்விற்காக தமிழ்நாடு அரசு பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெற்றவர்களில், 50 பேர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ள செய்தி அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.
குறிப்பாக, மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவிலான தரவரிசைப்பட்டியலில் 23-ஆம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ள தம்பி சிவச்சந்திரன், அகில இந்திய அளவில் 39-ஆவது இடத்தை பிடித்துள்ள தங்கை மோனிகா ஆகியோருக்கு என்னுடைய பாராட்டுகள்.
நான் முதல்வன் திட்டம், இலக்கை நோக்கி சரியான திசையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் இருந்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நான் முதல்வன் மூலம் ஒன்றிய அரசுப்பணிக்கு தேர்வாகியுள்ள தமிழ்நாட்டு இளைஞர்கள், ஏழை எளிய மக்கள் மேன்மையடையும் வண்ணம் செயலாற்றிட என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற நான் முதல்வன் திட்ட மாணவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி பாராட்டு!!.. appeared first on Dinakaran.