யுஜிசி வரைவு விதிமுறைகளை கண்டித்து சென்னையில் திமுக மாணவரணி நாளை ஆர்ப்பாட்டம்

10 hours ago 2

சென்னை: பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு விதிமுறைகள் 2025-ஐ கண்டித்து, இந்தியா முழுவதும் உள்ள கல்வியாளர்கள், மாணவர்களிடம் இதன் ஆபத்தை எடுத்துரைக்கும் வகையிலும், முதல் கட்டமாக, நாளை (ஜன.10) சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் கல்வி உரிமையையும், மாநில உரிமையையும் பறிப்பதற்கு மத்தியில் ஆட்சி செய்யும் ஆர்எஸ்எஸ் - பாஜக பாசிச அரசு தொடர் முயற்சிகளைச் செய்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் எளிய மக்களின் கல்வியை கபளீகரம் செய்வதற்கும், சமூகநீதியை பறிப்பதற்கும் செய்த முயற்சிகளை தமிழகம் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, எப்படியேனும் அதை தமிழகத்தில் கொண்டுவந்து தமிழகத்தின் கல்வி வளர்ச்சியைத் தடுக்க தனது அனைத்து அதிகாரங்களையும், வழிகளையும் பயன்படுத்துகிறது மத்திய பாஜக அரசு.

Read Entire Article