வீட்ல ரொம்ப நேரம் இருக்காதீங்க… மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? எல் அண்ட் டி நிறுவன தலைவர் கேள்வியால் சர்ச்சை

8 hours ago 2

*  வாரம் 90 மணி நேரம் வேலை செய்ய அழைப்பு

புதுடெல்லி: வாரம் 90 மணி நேரம் வேலை செய்ய வசதியாக ஊழியர்கள் அதிக நேரம் அலுவலகத்தில் செலழிக்க வேண்டும். வீட்டில் இருந்தால் மனைவியை எவ்வளவு நேரம் உற்றுபார்க்க முடியும் என்று எல்அண்ட் டி நிறுவன தலைவர் சுப்ரமணியன் கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாடு வேகமான முன்னேற ஊழியர்கள் வாரம் 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்ற கருத்தை இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி தெரிவித்தார்.

அதை தொடர்ந்து அவருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கடந்த மாதம் பிரபல தொழில் அதிபர் அதானியும் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ ஒருவர் குடும்பத்துடன் எட்டு மணி நேரம் செலவழித்தால் மனைவி வெளியேறிவிடுவார்’ என்று தெரிவித்தார். இப்போது லார்சன் அண்ட் டூப்ரோ (எல்மற்றும்டி) தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் வாரத்தில் 90 மணி நேர வேலை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அவர் கூறுகையில்,’ வீட்டில் இருக்கும் நேரத்தை குறைத்து, அலுவலகத்தில் இருக்கும் நேரத்தை ஊழியர்கள் அதிகரிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை வேலை வாங்க முடியவில்லையே என்று நான் வருந்துகிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை வேலை செய்ய வைக்க முடிந்தால், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஏனென்றால் நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்கிறேன்.

வீட்டில் உட்கார்ந்து என்ன செய்வீர்கள்? உங்கள் மனைவியை எவ்வளவு நேரம் முறைத்துப் பார்க்க முடியும்? மனைவிகள் தங்கள் கணவர்களை எவ்வளவு நேரம் முறைத்துப் பார்க்க முடியும்?. எனவே வாருங்கள், அலுவலகத்திற்குச் சென்று வேலையைத் தொடங்குங்கள். சீனர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்கிறார்கள், அதே நேரத்தில் அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். அப்படியானால் அதுதான் உங்களுக்கான பதில். நீங்கள் உலகின் உச்சியில் இருக்க வேண்டும் என்றால், வாரத்திற்கு 90 மணிநேரம் உழைக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். அவரது கருத்து தற்போது சர்ச்சையாகி உள்ளது.

The post வீட்ல ரொம்ப நேரம் இருக்காதீங்க… மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? எல் அண்ட் டி நிறுவன தலைவர் கேள்வியால் சர்ச்சை appeared first on Dinakaran.

Read Entire Article