யுகாதி பண்டிகையையொட்டி திருப்பதியில் தெலுங்கு வருட பஞ்சாங்கம் வாசிப்பு

1 week ago 4

திருமலை: திருப்பதியில் யுகாதி பண்டிகையையொட்டி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கு வருட பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் யுகாதி ஆஸ்தானம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 3 மணிக்கு சுப்ரபாதம் சேவை தொடங்கி தங்க கதவு அருகே தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி காலை 6 மணிக்கு விஸ்வ சேனாதிபதியுடன் இணைந்து ஆனந்த நிலையம் மற்றும் கொடி மரத்தை சுற்றி ஊர்வலமாக வந்து அருள்பாலித்தனர்.

கருடாழ்வார் சன்னதி அருகே கொலு வைக்கப்பட்டது. பின்னர் மூலவருக்கும், உற்சவ மூர்த்திக்கும் புதிய பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்பட்டு விஸ்வவாசு தெலுங்கு ஆண்டுக்கான வருட பஞ்சாங்கத்தை கோயிலின் அர்ச்சகர்கள் படித்து காண்பித்து சிறப்பு நெய்வேத்தியம் சமர்பித்தனர்.

The post யுகாதி பண்டிகையையொட்டி திருப்பதியில் தெலுங்கு வருட பஞ்சாங்கம் வாசிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article