சென்னை :“மொழிப் போராட்டத்தின் வரலாறு மிக நீண்ட நெடியது. யாராக இருந்தாலும் அதைத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். மொழிக்காக பலரும் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது” என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் பேசி வைத்து நாடகமாடுவதாக விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். பெண்களை கேவலமாக பேசுவதை எப்படி சகித்துக் கொண்டு அந்த கட்சியில் இருக்கிறார்கள் என தெரியவில்லை என்று சீமான் குறித்த கேள்விக்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி இவ்வாறு கூறினார்.
The post “யாராக இருந்தாலும் வரலாற்றைத் தெரிந்துகொண்டு பேச வேண்டும்” : கனிமொழி எம்.பி. appeared first on Dinakaran.