யானை தாக்கி 2 பேர் பலி வயநாட்டில் முழு அடைப்பு போராட்டம்

3 months ago 6

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 2 நாளில் 2 பேர் யானை தாக்கி இறந்தனர். கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் வனவிலங்குகளால் 4 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி வயநாடு மாவட்டத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி நேற்று காலை 6 மணிக்கு போராட்டம் தொடங்கியது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து வந்த வாகனங்களை அவர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போலீசார் அவர்களை விரட்டியடித்தனர். மாலை 6 மணி வரை போராட்டம் நடந்தது.

The post யானை தாக்கி 2 பேர் பலி வயநாட்டில் முழு அடைப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article