யாதாத்ரி புவனகிரி லட்சுமி நரசிம்மர் கோயிலில் தடுப்பு கம்பியில் தலை சிக்கி அரை மணி நேரம் போராடிய சிறுவன்

3 weeks ago 7

*பக்தர்கள் பத்திரமாக மீட்டனர்

திருமலை : யாதாத்ரி புவனகிரி லட்சுமி நரசிம்மர் கோயிலில் உள்ள தடுப்பு கம்பியில் தலை சிக்கி போராடிய சிறுவனை பக்தர்கள் மீட்டனர். யாதத்கிரி புவனகிரி மாவட்டம், யாதத்கிரி குட்டாவில் புகழ்பெற்ற லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தெலங்கானா மாநிலம், ஐதராபாத் பொடுப்பள்ளை சேர்ந்த ஒரு குடும்பத்தினர்.

சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் நேற்று காலை ₹150 சிறப்பு தரிசன வரிசையில் சுவாமி தரிசனத்திறக்ாக காத்திருந்தனர். அப்போது வரிசையில் தயாகர்(7) என்ற சிறுவனும் காத்திருந்தான். இந்நிலையில், தரிசன வரிைசயில் உள்ள தடுப்பில் தயாகர் விளையாடிக்கொண்டிருந்தபோது அவனது தலை கம்பியின் இடையில் சிக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த சக பக்தர்கள் சிறுவனை மீட்க முயன்றும் முடியவில்லை.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கோயில் ஊழியர்களுடன் இணைந்து சுமார் அரை மணி நேரம் போராடி கம்பிகளுக்கு இடையே சிக்கிய சிறுவன் தலையை வெளியே எடுத்தனர். இதற்கிடையில், சிறுவன் அலறல் சத்தம் அங்குள்ள பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

The post யாதாத்ரி புவனகிரி லட்சுமி நரசிம்மர் கோயிலில் தடுப்பு கம்பியில் தலை சிக்கி அரை மணி நேரம் போராடிய சிறுவன் appeared first on Dinakaran.

Read Entire Article