மோட்டார் சைக்களில் சென்ற பெண் எஸ்.ஐ., பெண் காவலர் உயிரிழப்பு

2 months ago 15
மேல்மருவத்தூர் அருகே அதிகாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தை சேர்ந்த பெண் உதவி ஆய்வாளரும், பெண் காவலரும் உயிரிழந்தனர். வழக்கு ஒன்றின் விசாரணைக்காக மோட்டார் சைக்கிளில் இருவரும் சென்றபோது, பின்னால் வந்த  புதுச்சேரியைச் சேர்ந்த டாடா இண்டிகோ கார் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிளை ஒட்டிச் சென்ற  உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலும், பெண் காவலர் நித்யா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர். விபத்து குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read Entire Article