மோடி-ஜின்பிங் பேச்சுவார்த்தை இந்தியா – சீனா உறவில் சாதகமான முன்னேற்றம்: ரஷ்ய தூதர் பேட்டி

3 weeks ago 4

புதுடெல்லி: ரஷ்யாவின் கசானில் கடந்த 23ம் தேதி, பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கல்வான் மோதலுக்குப் பிறகு ஏற்பட்ட எல்லைப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காணப்பட்டதால், சுமார் 5 ஆண்டுக்குப் பிறகு நடந்த இந்த இருதரப்பு பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்கு ரஷ்யா உதவியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், ‘‘கசானில் நடந்த பிரிக்ஸ் மாநாடு முழு வெற்றி பெற்றது. இந்த அமைப்பு யாருக்காகவும் பிரத்யேகமானதல்ல, அனைவரையும் உள்ளடக்கிய தளம். இதில், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் இடையே நடந்த பேச்சுவார்த்தை இந்தியா, சீனா உறவில் ஏற்பட்ட சாதகமான முன்னேற்றம். இதை முழுமனதுடன் வரவேற்கிறோம். இந்த விஷயத்தில் ரஷ்யாவின் பங்கு எதுவுமில்லை. பிரிக்ஸ் அமைப்பு மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானது அல்ல. அதே சமயம் அது மேற்கத்திய நாடுகளுக்கான அமைப்பும் அல்ல’’ என்றார்.

The post மோடி-ஜின்பிங் பேச்சுவார்த்தை இந்தியா – சீனா உறவில் சாதகமான முன்னேற்றம்: ரஷ்ய தூதர் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article