சென்னை: மோடி எதுவும் செய்ய மாட்டார், ‘அங்கு எதுவும் நடக்கவில்லை’ என சொல்லி உங்களைத் தூங்க வைப்பார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார். காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பின்னர், இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்தியா ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களின் ஆதரவாளர்களையும் அடையாளம் கண்டு, கண்காணித்து தண்டிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (24.04.2025) அன்று தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தியவர்களும் அவர்களை ஆதரித்தவர்களும் “அவர்கள் கற்பனை செய்ததை விட அதிகமாக” தண்டிக்கப்படுவார்கள் என்று மோடி கிழக்கு மாநிலமான பீகாரில் ஒரு பொதுக் கூட்டத்தில் கூறினார். இந்த நிலையில், மோடி எதுவும் செய்ய மாட்டார். பீகார் சென்று உரையாற்றியதற்கு பதிலாக அவர் காஷ்மீருக்குச் சென்றிருக்க வேண்டும். விஷயம் முடிந்துவிட்டது, நம்பிக்கை இழந்து அனைவரும் இதை கடந்துச் செல்வோம். ‘அங்கு எதுவும் நடக்கவில்லை’ என சொல்லி உங்களைத் தூங்க வைப்பார் மோடி என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்தார்.
The post மோடி எதுவும் செய்ய மாட்டார், ‘அங்கு எதுவும் நடக்கவில்லை’ என சொல்லி உங்களைத் தூங்க வைப்பார்: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் appeared first on Dinakaran.