தெலுங்கானா: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு வரும் முதலீடுகளை பிரதமர் நரேந்திர மோடி குஜராத்துக்கு மடைமாற்றுவதாக தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டியுள்ளார். ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டு பேசினார். அப்போது மொத்த இந்தியாவுக்கும் பிரதமராக இருக்க வேண்டிய நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்துக்கு மட்டும் பிரதமர் என்பது போல செயல்படுவதாக அவர் குற்றச்சாட்டினார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை ஒழித்து விட வேண்டும் என்பது போலவே பிரதமர் மோடியின் செயல்பாடுகள் இருப்பதாகவும் ரேவந்த் ரெட்டி புகார் கூறினார்.
தெலுங்கானா மாநிலத்துக்கு வரவேண்டிய செமிகண்டக்டர் ஆலையை குஜராத் மாநிலத்துக்கு மடை மாற்றி கொண்டு சென்று விட்டதாகவும், மராட்டியத்துக்கு வரவேண்டிய 17 திட்டங்களை குஜராத்துக்கு கொண்டு சென்று விட்டதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு வரும் முதலீடுகளை குஜராத்துக்கு மடை மாற்றுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே குற்றச்சாட்டி இருந்த நிலையில், தற்போது தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் அதே குற்றச்சாட்டை முன்வைத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post மோடி இந்தியாவின் பிரதமரா? குஜராத்தின் பிரதமரா?: தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.