மொழிப்போர் தியாகிகளுக்கு 25ல் அமமுக மரியாதை

5 months ago 15

சென்னை: தாய்மொழியாம் தமிழ்மொழியை காத்திட்ட தீரர்களாம் மொழிப்போர் தியாகிகளுக்கு வருகிற 25ம் தேதி டிடிவி தினகரன் மரியாதை செலுத்துகிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : தாய்மொழி தமிழுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் மொழி ஆதிக்கத்தை தீரத்துடன் எதிர்த்து தன்னுயிர் நீத்த தியாகத் தீபங்களான மொழிப்போர் தியாகிகளுக்கு அமமுக சார்பில் வரும் 25ம் தேதி தமிழகம் முழுவதும் வீரவணக்கம் செலுத்திடுவோம்.

அன்றைய தினம் தமிழகத்திலுள்ள அனைத்து கழக மாவட்டங்களிலும் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலரஞ்சலி செலுத்திடுவதோடு, அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் பொதுக்கூட்டத்தை மாவட்டக் கழகச் செயலாளர்களுடன், மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செய்திட வேண்டும்.

The post மொழிப்போர் தியாகிகளுக்கு 25ல் அமமுக மரியாதை appeared first on Dinakaran.

Read Entire Article