மொமினுல் ஹக் சதம்... முதல் இன்னிங்சில் 233 ரன்கள் சேர்த்த வங்காளதேசம்

3 months ago 28

கான்பூர்,

இந்தியாவுக்கு வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. இதில் 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த வங்காளதேசம் 35 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்த போது, மழை பெய்தது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டங்களும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேசம் தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வங்காளதேசம் தரப்பில் சிறப்பாக விளையாடிய மொமினுல் ஹக் சதம் விளாசி 107 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து இந்தியா தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

Read Entire Article