தேவையான பொருட்கள்
1 கப் மொச்சை பயறு
1/4 கப் சாம்பார் வெங்காயம்
1 டீஸ்பூன் மிளகாய் தூள்
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
1/4 கப் தேங்காய் துருவல்
உப்பு தேவையான அளவு
தாளிக்க:
1டீஸ்பூன் கடுகு
1/4 டீஸ்பூன் உளுந்துப்பருப்பு
1/4 டீஸ்பூன்கடலை பருப்பு
செய்முறை:
பச்சை மொச்சையை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.வெங்காயம் நறுக்கி,மற்ற பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.மிளகாய் தூள், மஞ்சள் தூள்,உப்பு எல்லாம் எடுத்து வைக்கவும்.மொச்சையை தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.ஸ்டவ்வில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து,கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் வேகவைத்து வைத்துள்ள மொச்சையை சேர்க்கவும்.பின் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.பச்சை வாசம் போகும் வரை வதக்கி,துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.இப்போது எடுத்து பரிமாறும் பௌலுக்கு மாற்றவும்.சுவையான மொச்சை பயறு பொரியல் சுவைக்கத் தயார்.
The post மொச்சைப் பயறு பொரியல் appeared first on Dinakaran.