மைசூரு: அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கண்டெடுப்பு

4 months ago 13

மைசூரு,

கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா லேஅவுட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளார். இறந்தவர்கள் 45 வயது சேத்தன், அவரது மனைவி ரூபாலி (43 வயது); தாய் பிரியம்வதா (62) மற்றும் மகன் குஷால் (15 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையின்படி, தொழிலதிபரான சேத்தன் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு பின்னர் மற்றொரு குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர்.

நேற்று இரவு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு உறவினர்களுக்கு வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அதனை இன்று அதிகாலை பார்த்த உறவினர்கள் உடனடியாக போலீசார் தகவல் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக கடன் காரணமாக சேத்தன் இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்புள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், அவர்களின் மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலீஸ் கமிஷனர் சீமா லட்கர் தெரிவித்துள்ளார்.

Read Entire Article