மேல்மருவத்தூர் அருகே நீட் தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை

4 hours ago 1

சென்னை: நீட் தேர்வு பயத்தில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள அகிலி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் கயல்விழி (17). இந்தாண்டு பிளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கும் நிலையில், நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார். இதற்காக மாணவி கயல்விழி இரவு முழுவதும் படித்துக்கொண்டிருந்ததாக தெரிகிறது. இதன்பிறகு நேற்று அதிகாலை படுக்கை அறைக்கு சென்ற கயல்விழி வெளியே வரவே இல்லை.

சென்னை தாம்பரத்தில் உள்ள மையத்தில் தேர்வு எழுத செல்லவேண்டும் என்பதால் அவரது தாய் நேற்று அதிகாலை 4 மணி அளவில் சென்று கதவை தட்டியபோது திறக்கவில்லை. இதனை தொடர்ந்து பலமுறை தட்டியபோதும் திறக்காததால் பதற்றம் அடைந்தவர் உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கயல்விழி தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து, கதறி அழுதார்.

இதுகுறித்து மேல்மருவத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பின்னர் கயல்விழி உடலை பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீட் தேர்வு எழுத உள்ள நிலையில் மாணவி கயல்விழி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post மேல்மருவத்தூர் அருகே நீட் தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article