*மஞ்சள் காமாலை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு
நெல்லை : மேலப்பாளையத்தில் மஞ்சள் காமாலை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் குடிநீர் தொட்டிகளை அப்துல்வகாப் எம்எல்ஏ மற்றும் கமிஷனர் சுகபுத்ரா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
பாளை தொகுதி எம்எல்ஏ அப்துல்வஹாப், நெல்லை மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் நேற்று மேலப்பாளையம் வாட்டர் டேங்க், ஜின்னாதிடல் வாட்டர் டேங்க் மற்றும் அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை ஆய்வு செய்து மஞ்சள்காமாலை நோய்தொற்று பரவாத வண்ணம் தடுக்கும் பணிகளை விரைந்து செய்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
குடிநீர் ெதாட்டிகளை சுழற்சி முறையில் சுத்தம் செய்யவும் கேட்டு கொண்டனர். பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கிடவும், உமறுபுலவர் தெருவில் கழிவு நீரோடைகள் அமைப்பதற்கும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் எம்எல்ஏ அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மேலப்பாளையம் மண்டல சேர்மன் கதீஜா இக்லாம் பாசிலா, பகுதி செயலாளர் துபை சாகுல் ஹமீது, மாநகர துணை செயலாளர் அப்துல்கையூம், மாநகராட்சி சுகாதார குழு சேர்மன் ரம்ஜான்அலி, கவுன்சிலர்கள் அலிசேக்மன்சூர், சுந்தர், முகைதீன் அப்துல் காதர், மாநகர பொறியாளர் கண்ணன், மேலப்பாளையம் உதவி கமிஷனர் சந்திரமோகன், மாநகர நல அலுவலர்(பொ) ராணி, சுகாதார அலுவலர் சாகுல்ஹமீது மற்றும் வட்ட செயலாளர்கள் உஸ்மான், காஜாமைதீன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சுடலைகண்ணு, ஆனந்த், சேக்உஸ்மானி, பாதுஷா, மாரிபாண்டி, ரஹ்மான்ஷா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
The post மேலப்பாளையத்தில் குடிநீர் தொட்டிகளை அப்துல்வகாப் எம்எல்ஏ, கமிஷனர் ஆய்வு appeared first on Dinakaran.