மேற்கு வங்கத்தில் இரு பிரிவினர் மோதல்; கலவர பகுதிக்கு செல்ல முயன்ற ஒன்றிய அமைச்சர் தடுத்து நிறுத்தம்

1 month ago 13

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் உள்ள மோத்தா பாரியில் ராம நவமிக்கான பேரணி மசூதி ஒன்றை கடந்து செல்லும் போது இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கல்வீசி தாக்குதல் நடந்தது. இதில் வீடுகள் வாகனங்கள் சேதமடைந்தன. இதனால் பதற்றம் ஏற்பட்டது. கலவரத்தில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர் என எஸ்பி பிரதீப் குமார் யாதவ் தெரிவித்தார்.இந்த நிலையில் ஒன்றிய அமைச்சர் சுகந்தரா மஜூம்தார் தலைமையில் பாஜ குழுவினர் நேற்று மோத்தாபாரிக்கு செல்ல முயன்றனர். மோத்தாபாரியில் இருந்து 3 கிமீ தொலைவிலேயே பாஜ குழுவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

The post மேற்கு வங்கத்தில் இரு பிரிவினர் மோதல்; கலவர பகுதிக்கு செல்ல முயன்ற ஒன்றிய அமைச்சர் தடுத்து நிறுத்தம் appeared first on Dinakaran.

Read Entire Article