மேம்பால கட்டுமான பணி காரணமாக தேனாம்பேட்டை - நந்தனம் இடையே நாளை வரை போக்குவரத்து மாற்றம்

3 hours ago 1

சென்னை: அண்ணாசாலை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான நான்கு வழிசாலைக்கான மேம்பால கட்டுமான பணிகள் நெடுஞ்சாலை துறையால் மேற்கொள்ளபட்டு வருகிறது. இதையடுத்து அப்பகுதிகளில் நேற்று (20-ம் தேதி) முதல் 22-ம் தேதி வரை 3 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

அதன்படி, தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் செனடாப் சாலை, டர்ன்புல்ஸ் சந்திப்பு வழியாக திருப்பிவிடப்பட்டு, சேமியர்ஸ் சாலையில் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலை) வலதுபுறம் திரும்பி நந்தனம் சந்திப்புக்கு சென்று, பின்னர் இடது - வலது புறம் திரும்பி அண்ணாசாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

Read Entire Article