மேட்டூர் பழைய அனல் மின் நிலையத்தின் 4-வது யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கியது

1 day ago 1

சேலம்,

மேட்டூர் பழைய அனல் மின் நிலையம் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுக்களுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 3-வது யூனிட்டில் ஏற்பட்ட விபத்து காரணமாக இந்த யூனிட்டில் நடைபெற்று வந்த 210 மெகாவாட் மின் உற்பத்தி தடைப்பட்டது.

இந்த நிலையில் 4-வது யூனிட்டில் 2 நாட்களுக்கு முன்பு கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பழுதை சீரமைக்கும் பணி நடைபெற்றது. தற்போது இந்த பணி முடிவடைந்தது. இதையடுத்து 4-வது யூனிட்டிலும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அதாவது விபத்து ஏற்பட்ட 3-வது யூனிட் தவிர மற்ற 3 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

அதாவது 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இந்த அனல் மின் நிலையத்தில் தற்போது 630 மெகாவாட் மின் உற்பத்தியை நடைபெற்று வருகிறது.

Read Entire Article