மேட்டூர் அருகே சோதனைச் சாவடியில் காவலர்கள் – வடமாநில சுற்றுலா பயணிகள் – உள்ளூர் மக்கள் மோதல்

17 hours ago 1

சேலம் : சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காரைக்காடு சோதனைச் சாவடியில் காவலர்கள் – வடமாநில சுற்றுலா பயணிகள் – உள்ளூர் மக்கள் மோதலில் ஈடுபட்டனர். உத்தரப் பிரதேசத்தில் இருந்து வந்த சுற்றுலாப் பேருந்தில் மதுவிலக்கு போலீசார் சோதனை நடத்திய போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 2 காவலர்கள் மீது பேருந்தில் மதுபோதையில் இருந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காவலர்களுக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள், சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதில் 4 பேர் காயம் அடைந்தனர். 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மேட்டூர் அருகே சோதனைச் சாவடியில் காவலர்கள் – வடமாநில சுற்றுலா பயணிகள் – உள்ளூர் மக்கள் மோதல் appeared first on Dinakaran.

Read Entire Article