ஆதிரெங்கம் ஊராட்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு அஞ்சலி

15 hours ago 1

 

திருத்துறைப்பூண்டி, டிச.28: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பபட்டது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் ஊராட்சியில், கடந்த 2005 ஆம் ஆண்டு அனைத்து இந்திய குடிமகனும், அனைத்து அரசு தகவல்களையும் தெரிந்து கொள்ள ஏதுவாக தகவல் அறியும் உரிமை சட்டத்தையும், ஏழை மக்களின் துயர் துடைக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் கொண்டு வந்து, ஆண்டுக்கு நூறுநாள் வேலை வாய்ப்பை உருவா க்கிய இந்திய நாட்டின்முன் னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மறைவையொட்டி,மறை ந்த பிரதமருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நூறு நாள் வேலை பார்க்கும் பணியாளர்கள் ஒன்றிணைந்து, ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகர் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் கண்ணீருடன் மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள் ஜெயலெ ட்சுமி, கருப்பையன், பள்ளி மேலாண்மை குழு தலைவி ஞானசுந்தரி, மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர்ராதா, பணித்தள பொறுப்பாள ர்கள் கலையரசி, தண்டபாணி, பார்த்தசாரதி, சபிதா, பாலசுந்தரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post ஆதிரெங்கம் ஊராட்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு அஞ்சலி appeared first on Dinakaran.

Read Entire Article