மேட்டூர் அணையில் இருந்து பாசன நீர் நிறுத்தம்

2 hours ago 3

சேலம்,

தமிழகத்தில் பருவமழை காலம் என்பதால், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருவதால் டெல்டா பாசத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. இந்த சூழலில் நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 555 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 381 கன அடியாக இருந்தது. இந்நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 381 கன அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 114.14 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 84.43 டி.எம்.சி ஆகவும் இருந்தது.

இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசன நீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு கடந்த ஆண்டு ஜூலை 30ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 170 நாட்களில் அணையிலிருந்து 7.68 டி.எம்.சி. நீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article