“மேகேதாட்டு அணையை எதிர்த்தால் கர்நாடகாவில் தமிழ்ப் படங்கள் ஓடாது” - வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை

6 days ago 3

ஓசூர்: “கர்நாடகாவில் மேகேதாட்டு அணை கட்ட ஆட்சேபம் இல்லை என தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் அறிவிக்காவிட்டால், கர்நாடகாவில் தமிழ்த் திரைப்படங்கள் ஓடாது,” என கன்னட சலுவாலி இயக்கத் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகா - மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து சேவையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, மார்ச் 22-ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் போராட்டம் நடைபெறும் என்று கன்னட அமைப்புக்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில், மேகேதாட்டுவில் அணைக் கட்டுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து மறுத்து வருவதால், இதனை கண்டித்து, கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகளை சேர்ந்த 100-க்கும் மேற்ப்பட்டோர் இன்று (மார்ச் 8) கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தமிழக - கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு, தமிழகத்துக்குள் நுழைய முயன்றனர்.

Read Entire Article