தேவையான பொருட்கள்:
மேகி – 1 பாக்கெட்
அரிசி மாவு – 3 டேபிள் ஸ்பூன்
ரவை – 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1(பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
சில்லி ப்ளேக்ஸ் – 1/2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
மேகி மசாலா
கொத்தமல்லி – சிறிது
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் மிக்சர் ஜாரில் மேகியைப் போட்டு நன்கு மென்மையாக பொடித்துக் கொள்ள வேண்டும்.பின்பு அதில் அரிசி மாவு, ரவை, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.அதன் பின் சில்லி ப்ளேக்ஸ், சுவைக்கேற்ப உப்பு, மேகி மசாலா, சிறிது நறுக்கிய கொத்தமல்லி, தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை அள்ளி ரவா தோசைக்கு ஊற்றுவது போன்றே ஊற்ற வேண்டும்.பின் அதன் மேல் எண்ணெய் ஊற்றி, 2 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான மேகி தோசை தயார். இந்த தோசையை திருப்பிப் போட்டு வேக வைக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.